யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்:மட்டக்களப்பில் கலந்துரையாடல்(Video)
எதிர்வரும் 4ஆம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மட்டக்களப்பில் கலந்துரையாடல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கபடவுள்ள ஜனநாயக வழி போராட்டம் தொடர்பான கலந்துரையாடல் சிவில் அமைப்புக்களுடன் மட்டக்களப்பு நகரில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது மதகுருமார்,ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 30 சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவபடுத்திய பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்
இதேவேளை இந்த போராட்டம் குறித்து, நேற்றைய தினம் (28.01.2023) திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், தமது போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.
போராட்டத்திற்கு ஆதரவு
இந்த நிலையில், இப்போராட்டத்திற்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர், தென்கையிலை ஆதின குரு முதல்வர் உட்பட்ட சிவில் அமைப்புக்கள், மதகுருமார் ஆகியோர் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















