பூர்வீக காணியை விடுவியுங்கள்: மன்னாரில் வீதிக்கிறங்கிய பொது மக்கள்!
மன்னார் - மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று(15.10.2024) முன்னெடுக்கப்பட்ட றிலையில், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
“பூர்விகமாக அந்த பகுதியில் தோட்டம் செய்து வந்த காணியில் கடந்த 1997ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மீள்குடியேறிய நிலை
தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மீள்குடியேறிய நிலையில், 2012ஆம் ஆண்டு மீண்டும் அங்கு கச்சான், பயறு போன்ற சிறுதானிய பயிர் செய்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2015ஆ ம் ஆண்டு
திணைக்களத்தினர் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி அங்கு சிறுதானிய பயிர்
செய்கையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலை
படுத்தியுள்ளனர்” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியை வன வள திணைக்களத்தினர் கல் போட்டு தங்களின் பிரதேசமாக மாற்றிக்கொண்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பூர்விக காணி
அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எப்படி தமது பூர்விக காணிகளை நீங்கள் கையகப்படுத்துவீர்கள் என கேட்ட போது, “நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் அதற்கு பிறகு குறித்த பகுதியை விடுவிப்பதாக தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த பகுதி மக்களுக்கு உரியது என்றும் வன வள திணைக்களத்தினர் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்பளித்ததன் பின்னரும் வன வள திணைக்களத்தினர் விடுவிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |