நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
தமிழ் சிங்கள புத்தாண்டை (Tamil, Sinhala New Year) தொடர்ந்து இலங்கையில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளினதும் தொழிற்சங்கங்கள் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் இலங்கையில் (Sri Lanka) உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் பல தொழிற்சங்கங்கள் பணி விலகல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.
தொழிற்சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதன் பின்னர், பணி விலகல் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டிருந்தாலும் குறித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
கச்சத்தீவு குறித்து கேள்வியெழுப்பும் மோடி, சீன அத்துமீறல் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்..! சரத் பவார் கேள்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |