கச்சத்தீவு குறித்து கேள்வியெழுப்பும் மோடி, சீன அத்துமீறல் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்..! சரத் பவார் கேள்வி
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி, சீனாவின் நில ஆக்கிறமிப்பு குறித்து ஏன் பேசுவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் சில பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என அவர் வினவியுள்ளார்.
கடல்சார் ஒப்பந்தம்
முன்னதாக, 1974ல் அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவை "இந்தோ-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்" கீழ் இலங்கையின் எல்லையாக ஏற்றுக்கொண்டது.
எனினும் கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |