பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் மாபெரும் போராட்டம்
"தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தலவாக்கலை நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில் இன்னு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. ஆயிரம் ரூபா வழங்கப்படுவதும் இல்லை.
இந்நிலையில்,பொருட்களின் விலையும் எகிறியுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சுமைகளை திணிக்காமல், அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்கின்றனர்? கோவிட் தொற்றை காட்டியே தப்பிக்க பார்க்கின்றனர். பங்களாதேசிலும் பிரச்சினை தான். ஆனால் அங்குள்ளவர்கள் நாட்டை உரிய முறையில் நிர்வகிக்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு அதற்கான இயலுமை இல்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என குறிப்பிட்டு பாற்சோறு சமைத்து, சில தொழிற்சங்க தலைவர்கள் பட்டாசு கொளுத்தினர். இன்று அந்த கொடுப்பனவு கிடைப்பதில்லை. 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டிய நிலைமை. தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களை தாக்குகின்றது. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மௌனம் காக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில்,
இந்த நாட்டிலே இன்று நிர்வாகமொன்று இல்லை. அரசாங்கம் இருக்கின்றதா, அமைச்சரவை இருக்கின்றதா என்றுகூட தெரியவில்லை. பொருட்களின் விலை கட்டுக்கடங்காத வகையில் உயர்கின்றது. கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. பின்னர் அந்த முடிவு மீளப்பெறப்படுகின்றது.
எனவே, இங்கு எவ்வாறானதொரு ஆட்சி நடைபெறுகின்றது என தெரியவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்றனர். ஆனால் சம்பள அதிகரிப்பு உரிய வகையில் வழங்கப்படுவதில்லை. முறையாக அதனை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். அதனைவிடுத்து ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
அதேபோல அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலான தீர்வு விரைவில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் உரையாற்றுகையில்,
முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.
அன்று இருந்த நிலைமை தான் இன்றும் இருக்கின்றது. அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் இன்று நிதி அமைச்சர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமர். எனவே, இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதனால் தான் நாட்டு மக்கள் மீது சுமைகளை திணிக்கின்றனர்.
இன்று எமது தோட்டத்திலுள்ள தாய்மார் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறை சோறு திண்ணும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு முதுகெலும்பில்லை. எமது தாய்மாருக்காக போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
