ஊடகத்துறைக்கு எதிரான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்: இரா.துரைரட்னம் (Video)
இலங்கை அரசாங்கம் ஊடகத்துறையை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்றையதினம் (21.06.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ஊடகத்துறை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. இலங்கை அரசு நாடாளுமன்றத்தின் ஊடாக ஊடகத்துறைக்கு வைக்கப்படும் ஜனநாயக சதியை மக்கள் பிரதிநிதிகள் நிராகரிக்க வேண்டும்.
ஜனநாயக சுதந்திரம்
குறிப்பாக ஊடகத்துறை தொடர்பான விடயங்களுக்கு எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் ஏனைய ஜனநாயக சுதந்திரம் அவசியம்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசு சார்பாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடக ஒடுக்குமுறையை கண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
கடந்த ஒரு சில வாரங்களாக பொதுஜன பெரமுன விற்கும், ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இந்த முரண்பாடுகளினால் "தமிழ் மக்களுக்கான தீர்வு பின் தள்ளப்படும்" என சந்தேகம் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




