குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத் தந்த ரணில்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகவுள்ளார்.
விசாரணைகளுக்காக இரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் துறையினர் அழைத்திருந்தனர்.
வெளிநாட்டுப் பயணம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்றமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri