வவுனியாவில் வீசிய பலத்த காற்று: தூக்கி வீசப்பட்ட பேருந்து நிலைய கூரைகள்
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களான காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்றது.
நேற்று மாலை மழை மற்றும் கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டிருப்பதுடன், மேலும் சில கூரை தகடுகள் தரையில் விழும் நிலையில் காணப்படுகின்றது.
இந்த அனர்த்தம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் உடனடியாக நகரசபையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சனிக்கிழமை விடுமுறை தினத்திலும் ஓய்வில் நின்ற ஊழியர்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து செயற்பட்டிருந்தனர்.
கழன்று விழும் நிலையில் காணப்பட்ட கூரைத் தகடுகள் நகரசபையினரால் அகற்றப்பட்டதுடன், கீழே விழுந்த கூரைப் பகுதிகளும் அகற்றப்பட்டுள்ளன. நீர் உட்செல்லா வண்ணம் திருத்த வேலைகளை முன்னெடுக்க நகரசபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri