கடல் சார் சமூகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளுக்கு நாளை (15) பிற்பகல் 2.00 மணி வரை வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று இயற்கை இடர்பாடுகள் முன்னெச்சரிக்கை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இலங்கை தீவைச் சுற்றி காற்றின் வேகமானது மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை வீசும்.
அத்துடன் இந்த கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
