சீரற்ற காலநிலையால் நாட்டில் சில பகுதிகளில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடுமெனவும் காற்று தென்மேற்கு திசையில் வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும், கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (45-55) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

இந்த நிலையில் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும்
ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது
கொந்தளிப்பாக காணப்படுமெனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் இயல்பாகவே
இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan