கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிகோரி முழுகடையடைப்பு போராட்டம் (Video)
கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், இச் சம்பவத்துடன் தொடர்புடைய எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், கொலையாளிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதுடன் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாகவுள்ளனர் என்றும் உறவுகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிகோரி நாளை போராட்டம்
பரந்தனில் இளைஞர் ஒருவர் கொலை: மற்றொருவர் படுகாயம்(Photos)




