பரந்தனில் இளைஞர் ஒருவர் கொலை: மற்றொருவர் படுகாயம்(Photos)
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் நேற்று(01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்திக் வயது 24 என்பவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது அக்காவின் மகன் காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது தான் அதனை தடுக்க சென்றதாகவும் இதன் போது தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்ததாகவும், பின்னர் அவர்கள் கார்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (02) சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில்
நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.









Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

ஜாக்கெட் பாக்கெட்டில் வைத்த லொட்டரிச்சீட்டை மறந்த ஜேர்மானியர்: சமீபத்தில் கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
