கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிகோரி நாளை போராட்டம்
கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிகோரி பரந்தன் சந்தியில் நாளை (03) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பரந்தன் சந்தியில் புத்தாண்டு தினத்தில் குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திப் படுகொலை செய்ததோடு மேலுமொருவர் படுகாயமடைந்தார்.
போத்தலால் குத்தியதால் குறித்த இளைஞர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என உறவுகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியை நாளை இடம்பெறவுள்ளது. நாளை காலை வைத்தியசாலையில் இருந்தும் உடல் வீட்டுக்கு எடுத்துவரப்படவுள்ளது. இதன்போது பரந்தன் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும், கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் சந்தி வர்த்தக நிலையங்களும் நாளை துக்கத்தை வெளிப்படுத்தி கதவடைப்பை முன்னெடுக்கவுள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri