வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப்பகிஸ்கரிப்பு (Video)
வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் மற்றும் குறை நிரப்பு மருத்துவர் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த வடமாகாண தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மருத்து கலவையாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (30.12) பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.
அனைத்து தாதியருக்கும் ரூபா 5000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல், கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்கல், கோவிட் பரிசோதனை பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு போதிய வழங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக நோயாளர்கள், மற்றும் வழமையான சிகிச்சைக்கு வருவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இருப்பினும், அவசர நோயாளர் சேவைகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றது.







தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
