மிகுந்த விழிப்புடன் இருங்கள்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை (Video)
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவிட் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவிட் பாதிப்பைக் கண்டறிதல், பொது சுகாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது, கோவிட் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்தும், கோவிட் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், அதிகமானோர் ஓரிடத்தில் கூடுவது, பெரிய அளவில் கூட்டங்கள் நடத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
நாம் எந்த நிலையிலும் நமது பாதுகாப்பை தகர்க்க விடக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென் - கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர்டொக்டர் பூணம் கேத்ராபால் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri