தொழில் நிறுவனங்களுக்கு சுகாதார பிரிவின் கடுமையான எச்சரிக்கை
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களை பணிக்கு அழைக்க வேண்டாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளிடமும் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறான நோயாளிகளை பணிக்கு அழைப்பதனால் முழு நிறுவனத்திற்கும் கொவிட் ஆபத்து ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்கள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்துமாறு அவர் எச்ச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, குளிரூட்டி பொருத்தப்பட்டுள்ள இடங்களில் அல்லது முழுமையாக அடைக்கப்பட்டுள்ள இடங்களில் முகக் கவசமின்றி ஒன்றாக சாப்பிடுவது, கதைப்பது அல்லது தேனீர் குடிப்பது போன்ற விடயங்களை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் ஒன்றாக சேர்ந்து உணவு உட்கொள்வதனால் கோவிட் வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார பிரிவின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
