மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள்
இலங்கையின் மேல் மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று தெரிவித்தார்.
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சட்டமாக்கப்படும் என்று வன்னியாராச்சி கூறினார்.
குறிப்பாக மேல் மாகாணத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மாறாக மேற்கு மாகாணத்தில் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




