கியூ.ஆர் குறியீட்டு அட்டை பாவனையில் கடுமையான நடைமுறை
இலங்கையில் நிலவிய எரிபொருள் நெருக்கடி, தேசிய எரிபொருள் நடைமுறைக்காக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கு பிறரின் கியூ.ஆர் குறியீடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான மோசடி சம்பவங்களை தடுக்க எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியான நடைமுறை
இதற்கு தேவையான தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு நடைமுறைகளை தமது நிறுவனம் தயாரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர் தசுன் ஹகொட தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர் குறியீட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொருவர் கொள்வனவு செய்தால் அவரிடமிருந்து கியூ.ஆர் பதிவினை அழித்துவிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan