கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான நடவடிக்கைகள்! ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை
நாட்டில் அமுலில் உள்ள கோவிட் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டியிருக்கும் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிலைமையை அடிப்படையாக வைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை அல்லது முடக்கல்நிலைமையை அறிவிப்பது குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
காலத்திற்கு காலம் நிலைமையை ஆராய்ந்து சுகாதார அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக பொருளாதார விடயங்களில் சமநிலையை பேணும் அதேவேளை நாங்கள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவேண்டும் அல்லது நாட்டை முடக்கவேண்டும் என அதிகாரிகள் தீர்மானித்தால் தயக்கமின்றி பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
