குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை என தெரிவிப்பு
போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெறுதல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பொலிஸார் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக கடும் ஒழுங்கு நடவடிக்கை மாத்திரமல்லாது கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்குள் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலர், போதைப் பொருள் பவனை மற்றும் விற்பனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் போதைப் பொருள் ஒழிப்புக்கு மிகப் பெரிய தடையாக அமைந்துள்ளது எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
