ஆசிரியர்களைத் தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை! - அமைச்சர் வீரசேகர எச்சரிக்கை
"பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பயங்கரவாதம் உருவாவதற்கு வழிவகுத்த காரணி சரியாக இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் தவறாக இருக்கலாம். எனினும், அந்தவொரு காரணத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதன்மூலம் மக்களே பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் ஆசிரியர்களின் பிரச்சினை நியாயமானதாக இருக்கலாம். அதற்காகத் தொழிற்சங்க நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இதனால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பாடசாலைகளுக்குச் சமூகமளித்து, கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு வரவிரும்பும் ஆசிரியர்களுக்கு எவராவது அச்சுறுத்தல் விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam