இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கடுமையான சட்டங்கள்:செய்திகளின் தொகுப்பு
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான தண்டனைகளை வலுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
பாலியல் தொல்லைகள், பாலியல் தொந்தரவுகள், பாலியல் இலஞ்சம் மற்றும் குறித்த குற்றச் செயல்களுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கல் மற்றும் தற்போதுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்தல் அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும், இப்பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறிப்பட்டுள்ளது.
அதனால், பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்துவித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும், அதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் புதிய உறுப்புரைகளை உட்சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
