நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்
இலங்கையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வழங்கியுள்ளார்.
வைரஸ் பரவல்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம்.

டெங்கு, கோவிட், இன்புளுவன்சா மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருவதால், அவற்றை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருத்துவ பரிந்துரைகள் இன்றி சிகிச்சை
எனவே மருத்துவ பரிந்துரைகள் இன்றி சிகிச்சை எடுப்பது மிகவும் ஆபத்தானது. மழையுடன் கூடிய காலநிலையுடன், டெங்கு, கொவிட் மற்றும் இன்புளுவன்சா நோய்களின் பரவல் அதிகரிக்கக்கூடும்.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri