மக்களை பீதிக்கு உள்ளாக்கும் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை
மக்களை பீதிக்கு உள்ளாக்கும் மருத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
மக்களை பீதியடையச் செய்தல்
அரசியல் தேவைகளுக்காக போலியான புள்ளி விபரங்களை சமர்ப்பித்து மக்களை தேவையற்ற வகையில் பீதியடையச் செய்யும் உரிமை எந்தவொரு தொழில் வல்லுனருக்கும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களை பிழையான வழியில் நடத்தும் வகையிலான செய்திகளை வெளியிடுவது பாரதூரமான குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மருந்துப் பொருள் தட்டுப்பாடு மற்றும் சிறுவர் மத்தியில் மந்த போசனை தொடர்பில் தென் மாகாண மருத்தவர் ஒருவர் பணி இடைநீக்கப்பட்டுள்ளார்.
போலித் தகவல்கள்
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கம் என்ற போர்வையில் மக்களை பீதியடையச் செய்யவும் மக்களை பிழையாக வழிநடத்தவும் எவருக்கும் உரிமையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு போலித் தகவல்களை வெளியிடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டொக்டர் ருக்ஷான் பெல்லன வலியுறுத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.