கட்டுப்பாடுகளை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
கட்டுபாடுகளை மீறி மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையில் வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் வைத்தியசாலை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக 17 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளுக்கு அதிக கட்டணத்தை அறவிட்டு, பயணிகளை அழைத்துச்செல்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri