இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
பஸ்களின் இருக்கை எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ்களின் இருக்கைகளுக்கு மட்டும் பயணிகளை வரையறுத்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவுறுத்தலை மீறி பஸ்களின் இருக்கைகளை விடவும் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கால வரையறையின்றி இடைநிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ்களின் இருக்கை எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டே நியாமான கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியதாகவும், கோவிட் நெருக்கடி குறைந்த காலத்திலும் கட்டண அதிகரிப்பு நீடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் கோவிட் தீவிரமடைந்துள்ள நிலையில் வாகன இருக்கை எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்துவது ஆபத்தானது எனவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல் சட்டம் கடுமையான அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 15 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
