நடைபாதை கடைகள் தொடர்பில் நகரசபை பிறப்பித்துள்ள உத்தரவு
வவுனியா(Vavuniya) நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
பல்வேறு முறைப்பாடுகள்
இது தொடர்பாக வவுனியா நகரசபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்தநிலையில் நகரசபை செயலாளரால் வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறு குறித்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உத்தரவு
அந்தவகையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன், அந்த தினத்திற்குள் அகற்றப்படாது விடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடமாகாண ஆளுநர், மாகாண உள்ளூராட்சித் திணைக்களம்,
வவுனியா மாவட்ட செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பொலிஸ் போக்குவரத்துப்
பிரிவு ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan