வேர்களை மீட்டு உரிமை வென்றிட எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம்
வேர்களை மீட்டு உரிமை வென்றிட எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று கொட்டகலை முத்துவிநாயகர் கோயில் சந்தியில் நடைபெற்றது.
மலையக மக்கள் மலையகத்திற்கு வருகை இற்றைக்கு சுமார் 200 ஆண்டுகள் ஆகின்றன இதனை நினைவு கூறும் வகையில் எமது முன்னோர்கள் வருகை தந்த தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரை நடபயணம் ஒன்றும் இடம்பெற்றது.
இலங்கை வருகை தந்த எமது முன்னோர்கள் பல தியாகங்களை செய்து பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பினை செய்தனர் மலையக மக்களுக்கு கௌரவம்,சமாதானம் பாதுகாப்பு கூடிய முழு உரிமையினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அரசாங்க நடவடிக்கை
அத்தோடு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வி சுகாதாரம் காணி உள்ளிட்ட விடயங்களை ஏனைய மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது போல் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழி உரிதை சமூக பாதுகாப்பு,உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தியும் மக்களுக்கு தெனிவூட்டு வகையில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றன.
மிகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட குறித்த வீதி நாடகத்திற்கு பிரிடோ நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |