சஜித்தை வெற்றி பெற செய்ய ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயற்குழு கூட்டமானது நேற்று (11) மாலை அட்டாளைச்சேனை ஸக்கி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
செயற்குழுக் கூட்டம்
மேற்படி கூட்டமானது முன்னாள் கல்முனை மாநகர உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஏ.சீ.எம்.சமால்தீனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem), கட்சியின் தவிசாளர், பிரதித் தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |