ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 198 கிராம் 737 மில்லி கிராம் ஹெரோயின், 228 கிராம் 26 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 2,538 கிராம் 657 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
