யாழில் விஷமிகளின் அட்டகாசம் - நீர் வடிகால் மூடிகள் சேதம்
பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் செய்யப்பட்ட மூடிகளை அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொறுக்கியுள்னர்.
குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகள்
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள் காணப்படுவதனால், மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் அவற்றினை அகற்றுவதற்கும், ஏனைய மூடிகளை உடைக்காது பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில், வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட உறுப்பினர், அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening