ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான முக்கிய கப்பல் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அந்த நீர்வழி வழியாக செல்ல முயலும் எந்தவொரு கப்பல்களும் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் சேதமடையும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ஹார்முஸ் நீரிணை இஸ்லாமிய குடியரசின் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஐஆர்ஜிசி கடற்படை அதிகாரி முகமது அக்பர்சாதே ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான வளைகுடா கப்பல் பாதை வழியாக எண்ணெய் தாங்கிகளை அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam