ஹோர்முஸ் நீரிணை இனி பழைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை: ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி
உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்முனையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz), இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை என்று ஈரானிய நாடாளுமன்றத்தின் இரண்டாம் துணை சபாநாயகர் அலி நிக்ஸாத் (Ali Nikzad) தெரிவித்துள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மற்றும் நீரிணையில் ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டு வரும் எண்ணம் எங்களிடம் இல்லை, இது இஸ்லாமியப் புரட்சியின் உச்ச தலைவரின் நேரடி உத்தரவு" என்று அலி நிக்ஸாத் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து போர் தொடங்கியதில் இருந்தே, ஈரான் இந்த நீரிணையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதற்குப் பதிலடியாக ஏப்ரல் 13 முதல் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இதனால் குறிப்பாக ஆசிய நாடுகளுக்கான உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஏப்ரல் 8இல் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியால் தற்காலிகப் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், போர் மீண்டும் தொடருமா அல்லது அமைதி நிலவுமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரானின் இந்த பிடிவாதமான நிலைப்பாடு சர்வதேச மசகு எண்ணெய் சந்தையில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri