தேசிய அரசாங்கம் என்ற கதை ரணிலால் புனையப்பட்டது
அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வரும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற கதை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், புனையப்பட்ட பொய்யான செய்தி என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் யார் என பிரதமர் பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் என பத்திரிகை ஆசிரியர் பதிலளித்துள்ளார். இதனையடுத்து தேசிய அரசாங்கத்தின் பிரதமர் யார் என பிரதமர், பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அவர் ரணில் விக்ரமசிங்க என்று பதிலளித்துள்ளார்.
அப்போது பெரும் சிரிப்புடன் பதிலளித்துள்ள பிரதமர், “ அதுதானே அவர்கள் இருவரும் இருக்கின்றனர்.நான் இல்லை. அது ரணில் புனைந்த கதை. அதுதான் அந்த கதை சகல இடங்களிலும் பரப்புகின்றனர்.
நானும் ரணிலும் கடந்த காலத்தில் இருந்தே நண்பர்கள். எனினும் நாங்கள் இருவரும் இணைந்து ஆட்சி நடத்த முடியாது”. என கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, ஐக்கிய தேசியக் கட்சியின் 5 பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக இருப்பதாகவும் பேசப்பட்டது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri