ட்ரம்பினால் உலகில் ஏற்படப்போகும் 14 மில்லியன் இறப்புகள்..!
USAIDஐ நிறுத்துவதன் மூலம், உலகம் முழுவதும் 14 மில்லியன் இறப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஏற்படும் அதிர்ச்சி பல சிறிய நாடுகளுக்கு, தொற்று நோய் அல்லது ஒரு ஆயுத மோதலுக்கு இணையானதாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளாவிய மனிதாபிமான நிதி
அத்துடன், 2001 முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் USAID நிதியுதவி வளரும் நாடுகளில் 91.8 மில்லியன் இறப்புகளைத் தடுத்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு 133இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தரவுகளை சேகரித்துள்ளனர்.
இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும் வரை, உலகளாவிய மனிதாபிமான நிதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமானதை USAID வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
