தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடருந்து படிக்கட்டுகளில் நின்றபடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்வது தொடர்பாக தற்போது எந்த விதிகளும் நிபந்தனைகளும் இல்லை எனவும், ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக மலையகத்திற்கு செல்லும் தொடருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பதால் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொடருந்து திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண, பயணிகள் தொடருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொடர்பில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் அறிவித்தாலும், சுற்றுலா பயணிகள் அவ்வாறு தொடர்ந்து செய்வதால் அவற்றை தடுக்க கடினமாக உள்ளதாக தொடருந்து திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் அதிகாரிகளால் தாங்கள் துன்புறுத்தப்பட்டுவதாக தொடருந்து திணைக்களத்திடம் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
