புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு : லண்டனில் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் அதிரடி செயல்
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்லும் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இன்று காலை 8.00 மணியளவில், லண்டனிலுள்ள Peckham என்னுமிடத்தில் அமைந்துள்ள Best Western hotel என்னும் ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலரை, Dorset என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள Bibby Stockholm barge என்னும் மிதவைப்படகில் ஏற்றுவதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது.
தகவலறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பேருந்தை சூழந்துகொண்டு கையில் ட்ரம்கள், ட்ரம்பட்களுடன் திரண்ட அவர்கள் புலம்பெயர்ந்தோரை பேருந்தில் ஏற்றவிடாமல் தடுத்தார்கள்.
தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்
எல்லைகள் வேண்டாம், தேசங்கள் வேண்டாம், நாடுகடத்தல்களை நிறுத்துங்கள் என்றும், கைதுகள் வேண்டாம், விமானங்கள் வேண்டாம், அகதிகளுக்கும் மனித உரிமைகள் உள்ளன என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
அத்துடன், புலம்பெயர்ந்தோரை ஏற்ற முயன்ற பேருந்தின் டயர்களையும் ஆர்ப்பட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இனையடுத்து அங்கு வந்த பொலிஸார், ஆர்ப்பட்டக்காரர்களை கைது செய்வோம் என அச்சுறுத்தியுள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள புலம்பெயர்ந்தோர் தலைமறைவாகலாம் என்ற அச்சத்தில், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் துவங்கியுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
