நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள்: மக்கள் பாதையில் காத்திருக்கும் அவலம்(Video)
யாழ்ப்பாணம்-அச்சுவேலி தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு சில பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சேவைகள்
குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தாம் விலகி உள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சாரதி, நடத்துனர் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர்கள் தற்பொழுது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார பிரச்சினை
அச்சுவேலி தனியார் பேருந்து சேவையில் 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் தற்போது ஆறு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கோண்டாவில் பேருந்துசாலையில் டீசலை பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கின்ற பொழுதும் தமக்கான டீசல் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
