மன்னார் நகர பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள திண்மக்கழிவு அகற்றும் பணி (Photos)
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி ,பாப்பாமோட்டை பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டி சேகரிக்க கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 23 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மன்னார் நகர சபையினால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திண்மக்கழிவு சேகரிப்பு மற்றும் மலக்கழிவு அகழ்வு ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு எதிராக குறித்த பகுதியில் நிலத்தடி நீர் மாசு படுவதாகவும், குறித்த பகுதி பறவைகள் சரணாலயத்திற்கு உரிய இடம் என கோரி கடந்த 8ஆம் திகதி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் கடந்த 23 ஆம் திகதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் எவ்வித கழிவுகளும் கொட்டக் கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (29) முதல் மன்னார் நகர சபை பிரிவில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மலக்கழிவு மற்றும் திண்மக்கழிவு அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை
திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு அகழ்வு நிறுத்தப்பட்டமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் திண்மக்கழிவுகள் அகழ்வு செய்யப்படாமையினால் பல பாகங்களிலும் திண்மக்கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்களும் அரச திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மீளப்பெற்றுக்கொள்ள மன்னார் நகர சபை எதிர்வரும் திங்கட்கிழமை(4) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த காணி அரச காணியாக காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் நகரசபைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு குறித்த காணியில் திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டது.
குறித்த காணி பறவைகள் சரணாலயத்திற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்டு 2016 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
