அரசினை அபாண்டமாக பேசுவதை நிறுத்துங்கள்! வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து
சுயநல நோக்கோடு அரசின் மீது அபாண்டமான தாக்குதல்களை நடத்துவதை விடுத்து, அரசு இன்று எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஓரளசுக்கு மனிதாபிமானத்துடனும் அனுதாபத்துடனும் அணுகிப் பேச வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று(02.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வரவு - செலவுத் திட்டம்
அத்துடன் தற்போதைய அரசு சர்வதேச நிதி நெருக்கடிகள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நுகர்வோர் நலன் சார்ந்த கொள்கைகள் காரணமாகப் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் காரணமாக அரசு ஒருபுறம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த ஒப்பந்தமானது தற்போதைய அரசால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல.

இது கடந்த கால அரசால் உருவாக்கப்பட்டு தற்போதைய அரசின் தலையில் சுமத்தப்பட்ட ஒரு சிக்கலான நிலை. இதேவேளை, அரசு எதிர்பாராத வேறு சில சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி காரணமாகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அரசுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவைச் செலவினமாகச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய டெங்கு தொற்று நோய்ப் பரவலும் அரசுக்கு மற்றுமொரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
பொருள்களின் விலை
இவ்வாறான தொடர் சவால்களுக்கு மத்தியிலும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளை ஓரளவுக்கு நியாயமான மட்டத்தில் பேணுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உற்பத்தியாளர்களை விட, நாட்டின் பெரும்பான்மையான மக்களாக விளங்கும் நுகர்வோரின் நலன் குறித்து அரசு அதிகமாகச் சிந்திப்பதனாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

அரசின் இந்த நுகர்வோர் சார்பு அணுகுமுறை பாராட்டுக்குரியது. எனினும், உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் குறித்து அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.
நுகர்வோருக்கு வழங்கும் முக்கியத்துவத்தை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கத் தவறியமைக்காக அரசு மீது நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதேநேரம் அரசு தற்போது எதிர்நோக்கும் பிரம்மாண்டமான சவால்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan