சீனாவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறிவரும் குற்றச்சாட்டை சீனா இன்று கடுமையாக மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை பயன்படுத்தி சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீனா அச்சுறுத்தல்
‘சீனா அச்சுறுத்தல்’ என்பதை ஒரு காரணமாகக் கொண்டு சுயலாபங்களை தேடுவதனை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கண்டனம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
அந்த பதிவில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வட அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க “கோல்டன் டோம்” (Golden Dome) என அவர் அழைத்த திட்டத்தை உருவாக்கவும், அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
சர்வதேச சட்டம்
கிரீன்லாந்து குறித்து சீனா தனது நிலைப்பாட்டை பல முறை தெளிவாக தெரிவித்துள்ளது என குவோ ஜியாகுன் டிரம்பின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டமே இன்றைய உலக ஒழுங்கின் அடித்தளம். அதனை மதித்து பாதுகாக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள அமெரிக்கா–சீனா–ஐரோப்பா அரசியல் பதற்றம் சர்வதேச அரங்கில் மேலும் தீவிரமாகி வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.