பேச்சுவார்த்தைகள் மூலம் தீா்வு எட்டப்பட வேண்டும் – கிரீன்லாந்து
அமெரிக்காவுடனான முரண்பாட்டு நிலைமைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டுமென கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றும் விருப்பம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரீன்லாந்தின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரி மிரட்டல்கள் காரணமாக அமெரிக்கா–ஐரோப்பா இடையே பதற்றம் நிலவி வருகின்றது என தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்துக்கு ஆதரவு
எனினும் இந்த அழுத்தங்களுக்கு உட்பட மாட்டோம். உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் உறுதியாக நிற்போம் என கிரீன்லாந்து பிரதமர் நீல்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், பல நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவித்துவருவது மிகவும் முக்கியமானது என்வும் அவர் குறிப்பிட்டார்.
இது, கிரீன்லாந்து ஒரு ஜனநாயக சமூகமாகவும், தன் எதிர்காலம் குறித்து தானே முடிவெடுக்க உரிமை கொண்ட நாடாகவும் இருப்பதற்கான தெளிவான அங்கீகாரம் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள்
கிரீன்லாந்திலும், டென்மார்க்கிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு வலுவான, மரியாதைக்குரிய ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.

பலர் அமைதியான முறையில் எங்கள் நாட்டின் மீது கொண்ட அன்பையும், எங்கள் ஜனநாயகத்திற்கான மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தாம் மிகுந்த நன்றியுடன் இருப்பதாக ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் மேலும் தெரிவித்துள்ளார்.