மட்டக்களப்பில் ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு: பிரசார களத்தில் குழப்பநிலை
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith premadasa) ஆதரவு தெரிவித்து ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (rauf hakeem) மேடையில் உரையாற்றி கொண்டிருந்த போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, ரவூப் ஹக்கீம் உரையாற்றும் வேளை திடீரென கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு தெரிவிப்பு
இதன்போது, அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஹக்கீமின் பாதுகாப்பிற்காக அவரைச் சுற்றி சூழ்ந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஹக்கீம் தனது உரையை மிக சுருக்கமாக முடித்து கொண்டுள்ளார்.
அதேவேளை, கடந்த 23ஆம் திகதி அக்குறணையில் நடந்த பிரசார கூட்டத்திலும் ஹக்கீமிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
