ஒட்டுசுட்டான் மகாவித்தியால ஆசிரியர் விடுதியில் திருட்டு
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் விடுதியில் இருந்து திரவபெற்றோலிய வாயுகொள்கலன் திருடப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பெண்ஆசிரியர் விடுதியிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதல் வாரத்தில் விடுதியின் கதவு அடையாளம் தெரியாதோரால் உடைக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வருகைதரும் ஆசிரியர்கள்
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்று ஒரு வார இடைவெளியில் கதவு உடைக்கப்பட்டு விடுதியின் சமையல் அறையில் காணப்பட்ட திரவபெற்றோலிய வாயுகொள்கலன் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதியில் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வருகைதரும் ஆசிரியர்கள் தங்கியிருப்பதாப கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுதியில் திருட்டு நிகழ்வுகள் நடைபெறுவது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சுழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு ஆசிரியர்கள் விடுதியில் தங்கியிருக்கவும், தங்கள் உடமைகளை வைத்திருப்பதற்கும் அச்சமான சூழல் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |