மாணவர்கள் மீது குளவி கொட்டு! - பாடசாலை தற்காலிகமாக மூடல் (VIDEO)
ஹட்டன் - ஹெல்பொட தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (15) காலை பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டியதில் 17 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பருந்து தாக்கியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மீது குளவி கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மூன்று மாணவிகள் உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஏனையவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரின் பணிப்புரையின் பேரில் பாடசாலைக்கு வந்த ஏனைய மாணவர்களின் பாதுகாப்பிற்காக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.


