பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 14 பேர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று (24) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மதுபான சுற்றிவளைப்புகளில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 112 லீற்றர் மதுபானம், 780 லீற்றர் கோடா, இரு செப்புத் தகடுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தினபுரி - கொடக்கவெல பொலிஸ் பிரிவு, மஹகும்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆறு சுற்றிவளைப்புகளில், அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை - பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் ரக வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டபெத்தர பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 20 மணி நேரம் முன்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
