ஸ்டீவன் ஸ்மித்துக்கு உபாதை
இலங்கையில் நடைபெறவுள்ள கிரிக்கட் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் அணியின் தற்காலிக தலைவர் ஸ்டீவன் ஸ்மித் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற பிக் பாஸ் லீக் போட்டியின் போதே நேற்று முன்தினம் அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு வலது முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக களதடுப்பில் ஈடுபட்டபோதே அவர் கடந்த வெள்ளிக்கிழமை காயத்துக்கு உள்ளானார்.
பயிற்சி முகாம்
இந்த காயம் காரணமாக, துபாயில் நடைபெறும் அணியின் பயிற்சி முகாமுக்கு ஸ்மித் புறப்படுவது தாமதமாகியுள்ளது.
எனினும் நிபுணர் ஒருவரிடம் ஆலோசனையை பெற்ற பின்னர் அவர் இன்று பெரும்பாலும் துபாய்க்கு செல்வார் என்று எதிர்ப்பார்ப்பதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |