பழைய சட்டங்களை நீக்காது மறுசீரமைக்க நடவடிக்கை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள பழமைவாய்ந்த சட்டங்கள் அனைத்தையும் இரத்துச் செய்யாமல், அவற்றின் தனித்துவத்தைப் பேணி தற்போதைய டிஜிட்டல் யுகத்திற்குப் பொருந்தும் வகையில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அரசு சேவையை வினைத்திறனாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் "சட்ட மறுசீரமைப்பு" ஆரம்ப நிகழ்வு அமைச்சரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
சட்ட மறுசீரமைப்பு
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் இந்தச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
எமது நாட்டின் பெரும்பாலான சட்டங்கள் பிரித்தானிய காலத்துச் சட்டங்களாகும். அவற்றில் பல குறைபாடுகள் இருந்தாலும், அனைத்தையும் தூக்கியெறிய முடியாது. அவற்றின் சிறந்த அம்சங்களை உள்வாங்கி, தற்கால நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைப்பதே எமது இலக்கு.
புதிய சட்டங்கள்
2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து நாடு புதிய திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவாகும். பொருளாதார மேம்பாடு மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாகவே சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

அதற்காகவே நடைமுறைக்குச் சாத்தியமான புதிய சட்டங்களை இயற்றவும், உள்ள சட்டங்களைச் சீர்திருத்தவும் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்." என்றார்.
இந்த மறுசீரமைப்பின் மூலம் அரச சேவையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாகும் என்றும் அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri