மட்டக்களப்பில் புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் புதிய ஆண்டினை ஒளி நிறைந்த ஆண்டாக வரவேற்கும் வகையில் மாநகரசபையினால் காந்தி பூங்கா மற்றும் பல்வேறு பகுதிகளும் ஒளியூட்டப்பட்டுள்ளன.
இன்று மாலை மாநகரசபைக்கு முன்பாக கழிவு இருப்புகளினால் உருவாக்கப்பட்டுள்ள வரவேற்பு கோபுரம் ஒளியூட்டப்பட்டு இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.தயாபரனின் முயற்சியினால் இந்த வரவேற்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.தயாபரனின் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டு ஒளிக்கோபுரம் மற்றும் ஒளியூட்டப்பட்ட கம்பங்களைத் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் மா.சிவராஜா,பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகரசபை ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது புதிய ஆண்டினை வரவேற்கும் வகையிலான ஒளியூட்டப்பட்ட வரவேற்பு கோபுரம் மற்றும் காந்தி பூங்கா என்பன ஒளியூட்டப்பட்டுள்ளன.






