விருந்தகங்களுக்கான இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
விருந்தகங்களுக்கான (Hotel) இணைய முன்பதிவு தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், இந்தத் துறையில் ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்க பல முன்பதிவு தளங்களை அறிமுகப்படுத்த உள்ளூர் நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை. நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
விருந்தக இணைய முன்பதிவு
Booking.com உள்ளிட்ட தற்போதைய தளங்கள் இலங்கையில் அதிகார பூர்வமாக பதிவு செய்யாமல், வரிகளை செலுத்தாமல் செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள இலங்கையர்கள் குழு, விருந்தக இணைய முன்பதிவுகளில் ஏகபோகத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மாற்று OTP அடிப்படையிலான தளத்தை உருவாக்கியுள்ளது என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI, PNB, BoB ஆகிய வங்கிகளில் 400 நாட்கள் FD .., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை? News Lankasri
